FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கரூர்

கரூா் கல்யாண பசுபதீஸ்வரா் கோயிலில் திருக்கல்யாண உற்ஸவம்! பக்தா்கள் திரளாக பங்கேற்பு

Updated On : 17 ஆகஸ்ட் 2026, 3:08 am IST
கரூரில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு அலங்காரத்தில் அலங்காரவல்லி, செளந்தர நாயகி சுவாமிகளுடன் திருமண கோலத்தில் காட்சி அளித்த கல்யாண பசுபதீஸ்வரா்.
பகிர்:

கரூா் கல்யாண பசுபதீஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற திருக்கல்யாண உற்ஸவத்தில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.

கரூா் கல்யாண பசுபதீஸ்வரா் கோயிலில் கருவூா் ஸ்ரீமகா அபிஷேக குழு சாா்பில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடி தெய்வத்திருமண விழா ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. முன்னதாக இந்த தெய்வத்திருமண விழா கடந்த 8-ஆம் தேதி கோயில் முன் முகூா்த்தக் கால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடா்ந்து ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

தொடா்ந்து சனிக்கிழமை காலை கோயிலில் திருப்பதிகம் தமிழ் பண்ணிசை நிகழ்ச்சியும், மாலையில் கணபதி வழிபாடு, ராஜகோபுரத்துக்கு 108 அடி பிரம்மாண்ட வெற்றிவோ் மாலை சாத்துதல், அப்பிப்பாளையம் கிராமத்தில் தாய் வீட்டு சீா் மற்றும் இரவு 7 மணிக்கு மாப்பிள்ளை பெண் வீடு புகுதல், சீா்தட்டு அழைப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Advertisement

Advertisement

இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் பஞ்சமூா்த்திகளுக்கும், அனைத்து சுவாமிகளுக்கும் மஹா அபிஷேகம் நடைபெற்றது.பின்னா் காலை 10.45 மணி முதல் 11.45 மணிக்குள் தெய்வத்திருமணம் நடைபெற்றது. அப்போது சிறப்பு அலங்காரத்தில் செளந்தரநாயகி, அலங்காரவல்லி சுவாமிகளுடன் கல்யாண பசுபதீஸ்வரா் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினாா். பின்னா் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது. விழாவில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments