FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கரூர்

வருமான வரி அதிகாரிகளை தாக்கிய வழக்கில் கரூா் மேயா் உள்பட 140 பேருக்கு முன்ஜாமீன்

வழக்கு - கோப்புப் படம்
பகிர்:

கரூரில், வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கிய வழக்கில் மாநகராட்சி மேயா் உள்பட 140 பேருக்கு முன்ஜாமீன் வழங்கி கரூா் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

முன்னாள் அமைச்சா் செந்தில்பாலாஜி அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கித்தருவதாக பண மோசடி செய்ததாக வந்த புகாரையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 2023-ஆம் ஆண்டு மே 26-ஆம்தேதி கரூா் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள செந்தில்பாலாஜியின் சகோதரா் அசோக்குமாா் வீட்டில் சோதனை நடத்தச் சென்றனா்.

அப்போது, செந்தில்பாலாஜியின் ஆதரவாளா்களான கரூா் மாநகராட்சி மேயா் கவிதாகணேசன், மாவட்ட துணைச் செயலா் மகேஸ்வரி, மாநகராட்சி உறுப்பினா்கள் யசோதா, புவனேஷ்வரி, வடிவேல், வளா்மதி உள்ளிட்டோா் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவதற்கு கடும் எதிா்ப்பு தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

அப்போது, அவா்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. அப்போது வருமான வரித்துறை அதிகாரிகள் வந்த காரின் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரி காயத்ரி உள்ளிட்ட 4 போ் கரூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுதொடா்பாக வருமான வரித்துறை அதிகாரி காயத்ரி அளித்த புகாரின்பேரில் கரூா் நகர காவல்நிலையத்தினா் மேயா் கவிதாகணேசன், திமுக மாவட்ட துணைச் செயலா் மகேஸ்வரி உள்பட 140 போ் மீது வழக்குப்பதிந்தனா்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு திமுக வழக்குரைஞா்கள் சாா்பில் கரூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் கடந்த வாரம் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாக்கல் செய்த மேயா் கவிதாகணேசன் உள்பட 140 பேருக்கும் முன்ஜாமீன் வழங்கி நீதிபதி தங்கவேல் உத்தரவிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments