உங்களுக்கும் சிபிஐ, வருமான வரித்துறை வழக்குகள் வரும்! தவெகவுக்கு உதயநிதி பதில்!
தவெக எம்.எல்.ஏ. பேச்சுக்கு உதயநிதி ஸ்டாலினின் பதில் பற்றி...
தவெகவுக்கு சிபிஐ, வருமான வரித்துறை வழக்குகள் வரும் என்று அக்கட்சியின் எம்.எல்.ஏ. பேச்சுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த விவாதத்தில் திங்கள்கிழமை பேசிய திமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், “கடந்த 5 ஆண்டுகள் நாங்கள் ஆட்சியில் இருந்தபோது, காலை எழுந்தவுடன் முதல்வரிடம் இருந்து அழைப்பு வந்தால், எதாவது பிரச்னை நடந்துவிட்டதா என்று அச்சத்தில் இருப்போம். ஆனால், தற்போதைய அமைச்சர்கள் கூலாக இருக்கிறார்கள்” என்றார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் பேச்சை விமர்சித்து இன்றைய விவாதத்தில் பேசிய தவெக எம்.எல்.ஏ. சுகுமார், “எங்கள் மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை. நாங்கள் கூலாகதான் இருக்கிறோம். 5 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தலுக்காக மக்களை சந்திக்கும் போதும் கூலாகதான் இருப்போம்” என்றார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “நேற்று எங்கள் உறுப்பினர் பேசும்போது 5 ஆண்டுகளாக டென்ஷனாக இருந்தோம் என்று. அதற்கு பதிலளித்த நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த், நாங்களும் ஒவ்வொரு நிமிடமும் டென்ஷனாகதான் இருக்கிறோம் என்றார்.
மீண்டும் அதையே பேச வேண்டாம். உங்களுக்கும் சிபிஐ, வருமான வரித்துறை வழக்குகள் எல்லாம் வரும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் என். ஆனந்த், “சிபிஐ வழக்கு வரும் என்பதெல்லாம் சரிதான். எங்களுடைய டென்ஷன், தொகுதியில் மக்கள் பிரச்னை குறித்து முதல்வர் கேட்பார் என்பதைதான் நேற்று குறிப்பிட்டேன். வேறு எந்த அர்த்தத்திலும் இல்லை” என்றார்.
அதே எண்ணத்தில்தான் எங்களின் முன்னாள் அமைச்சரும் பேசினார் என்று உதயநிதி ஸ்டாலின் பதிலளித்தார்.
You too will face CBI and Income Tax cases! Udhayanidhi's reply to TVK!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.