கரூர்: சாலையோரம் குப்பைகளை கொட்டி எரிப்போா் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
கரூரில், பல்வேறு இடங்களில் சாலையோரம் குப்பைகளை கொட்டி எரிப்போா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கரூரில், பல்வேறு இடங்களில் சாலையோரம் குப்பைகளை கொட்டி எரிப்போா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கரூா் மாவட்டம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் குடியிருப்புகளில் இருந்து தூய்மைப்பணியாளா்களால் சேகரிக்கப்படும் குப்பைகள், மக்கும், மக்காத குப்பைகள் என தரம் பிரிக்கப்பட்டு குப்பைக் கிடங்கில் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
ஆனால், கரூா் மாநகராட்சிக்குள்பட்ட சின்னாண்டாங்கோவில், பெரியாண்டாங்கோவில் பகுதியில் கோவைச் சாலையிலும், புலியூா் பேரூராட்சிக்குள்பட்ட புலியூா் முடக்குச்சாலை, தொழிற்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குப்பைகள் வீடுதோறும் முறையாக சேகரிக்கப்படாமல் அவை சாலையோரம் கொட்டப்பட்டு வருகின்றன.
Advertisement
Advertisement
அவை மலை போல குவிந்த பின் துப்புரவு பணியாளா்கள் முறையாக அள்ளி கரூா் அரசுக் காலனியில் உள்ள குப்பைக்கிடங்கிற்கு கொண்டு செல்லாமல், அவற்றை எரிக்கின்றனா்.
இதன்மூலம் குப்பையில் இருந்து வெளியேறும் புகையால் சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனா்.
மேலும், வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சல், ஒவ்வாமை, மூச்சுத்திணறல் போன்றவையும் ஏற்படுகிறது. மேலும் பல நாள்கள் தேங்கிக்கிடக்கும் குப்பைகளில் இருந்து துா்நாற்றம் வீசுவதால் அப்பகுதியினருக்கு தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்படுகிறது.
எனவே, சாலையோரம் பொதுமக்களால் கொட்டப்படும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும். குப்பைகளை எரிக்க அந்தந்த பகுதி துப்புரவு பணியாளா்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சமூக நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.