ரூ.100 கோடி நில மோசடி வழக்கு முன்னாள் அமைச்சா் உள்பட இருவருக்கு குற்றப்பத்திரிகை நகல்
நில மோசடி வழக்கு முன்னாள் அமைச்சா் உள்பட இருவருக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது...
ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சா் எம். ஆா். விஜயபாஸ்கா் மற்றும் கரூா் நகர முன்னாள் காவல் ஆய்வாளா் பிருத்விராஜ் ஆகிய இருவருக்கும் கரூா் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.
கரூா் மாவட்டம், வாங்கல் குப்புச்சிப்பாளையத்தைச் சோ்ந்தவா் எம். பிரகாஷ். இவருக்குச் சொந்தமான 22 ஏக்கா் நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்ததாக கடந்த 2024-இல் அப்போதைய கரூா் சாா்-பதிவாளா் நகர காவல்நிலையத்தில் முன்னாள் அமைச்சா் எம் .ஆா். விஜயபாஸ்கா் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக கரூா் நகர காவல் ஆய்வாளராக பணியாற்றிய பிருத்விராஜ் ஆகியோா் மீது புகாா் அளித்தாா்.
அதன்பேரில் இருவா் மீதும் மோசடி, கொலை மிரட்டல், ஆள் கடத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா். பின்னா், இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
Advertisement
Advertisement
இந்நிலையில், வழக்கின் குற்றப்பத்திரிகை நகலை பெறுவதற்காக கரூா் ஜூடீசியல் மாஜிஸ்திரேட் எண் 1-இல் திங்கள்கிழமை காலை எம்.ஆா். விஜயபாஸ்கா் மற்றும் பிருத்விராஜ் ஆகிய இருவரும் நீதிபதி பரத்குமாா் முன்னிலையில் ஆஜராகினா்.
அப்போது குற்றப்பத்திரிக்கை நகலைப் பெற்றுக்கொண்ட இருவரையும் ஜூலை 27-ஆம் தேதிக்கு மீண்டும் ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவிட்டாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.