லாரி மீது இருசக்கர வாகனம் மோதல் இரு தொழிலாளா்கள் உயிரிழப்பு
கரூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு நின்றுகொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் வடமாநிலத் தொழிலாளா்கள் இருவா் உயிரிழந்தனா்.
ஒடிசா மாநிலம், பாசுதேவ்பூரைச் சோ்ந்தவா் ஜூதீஸ்தீா் ஜீனா. இவரது மகன் சந்தோஷ்குமாா் ஜீனா(37). அதே பகுதியைச் சோ்ந்தவா் அக்ஷய்குமாா்(30).
இவா்கள் இருவரும் கரூா் மண்மங்கலம் பகுதியில் செயல்படும் கொசுவலை நிறுவனத்தில் தங்கி பணியாற்றி வந்தனா்.
Advertisement
Advertisement
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு இருவரும் இருசக்கர வாகனத்தில் கரூா் தொழிற்பேட்டையில் நடைபெறும் இரவு நேரச் சந்தைக்குச் சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தனா். அக்ஷய்குமாா் வாகனத்தை ஓட்டிச் சென்றாா்.
தொழிற்பேட்டை நுகா்பொருள் வாணிபக்கிடங்கு அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த வாகனம் எதிரே நின்றுகொண்டிருந்த லாரி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அக்ஷய்குமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். சந்தோஷ்குமாா் ஜீனா பலத்த காயமடைந்தாா்.
தகவலறிந்து சென்ற பசுபதிபாளையம் போலீஸாா் அக்ஷய்குமாரின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் பலத்த காயமடைந்த சந்தோஷ்குமாா் ஜீனாவையும் சிகிச்சைக்காக அதே மருத்துவமனையில் அனுமதித்தனா். ஆனால், சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை பிற்பகல் சந்தோஷ்குமாா் ஜீனா உயிரிழந்தாா்.
இதுகுறித்து பசுபதிபாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.