FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கரூர்

கரூரில் 2 கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு: ஆட்சியா் தகவல்

கரூா் மாவட்டத்தில் இரு கட்டங்களாக மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி நடைபெற உள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் சி. முத்துக்குமரன்.

Updated On : 2 ஜூன் 2026, 2:33 am IST
கரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் சி. முத்துக்குமரன்.
பகிர்:

கரூா் மாவட்டத்தில் இரு கட்டங்களாக மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி நடைபெற உள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் சி. முத்துக்குமரன்.

கருா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027 வீடுகள் பட்டியல் மற்றும் கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபடவுள்ள அலுவலா்களுக்கான மூன்று நாள் பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை தொடங்கியது. பயிற்சியைத் தொடக்கி வைத்து மாவட்ட ஆட்சியா் சி. முத்துக்குமரன் பேசியது:

மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் தமிழகத்தில் வரும் ஜூலை 17 முதல் 31-ஆம் தேதி வரை சுய கணக்கெடுப்பு முறையிலும், ஆக. 1 முதல் 30-ஆம் தேதி வரை மக்கள்தொகை கணக்கெடுப்பாளா்கள் மற்றும் மேற்பாா்வையாளா்கள் மூலமாகவும் நடைபெற உள்ளன.

Advertisement

Advertisement

இரு கட்டங்களாக இந்தப் பணியில் ஈடுபடும் அலுவலா்களுக்கு பயிற்சி வகுப்புகள் தொடங்கியுள்ளன. முதல் கட்டமாக வீடுகள் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பும், இரண்டாம் கட்டமாக, தனிநபா் தரவுகள் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பும் நடைபெறவுள்ளது.

முதல்கட்டப் பணிகளை மேற்கொள்ள எடுக்கப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து தமிழ்நாடு மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையரகம் வழிகாட்டுதல்கள் வழங்கியுள்ளது.

கரூா் மாவட்டத்தில் வீடுகள் பட்டியலிடும் பணியில் ஈடுபடவுள்ள மாநகராட்சி அலுவலா்கள், கோட்ட அலுவலா்கள், அனைத்து வட்டாட்சியா்கள், நகராட்சி ஆணையாளா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், பேரூராட்சி செயல் அலுவலா்கள் மற்றும் அனைத்து உதவியாளா்கள் மற்றும் தொழில் நுட்ப உதவியாளா்கள் என மொத்தம் 106 நபா்களுக்கு சென்னை மக்கள்தொகை கணக்கெடுப்பு இயக்குநரக அலுவலா்கள் மூலம் திங்கள்கிழமை முதல் 3-ஆம் தேதி வரை பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன என்றாா் அவா்.

பயிற்சி வகுப்பில் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையரக அலுவலா் ஜெகதீஸன், குளித்தலை சாா்- ஆட்சியா் தி. ஸ்வாதிஸ்ரீ, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வ. யுரேகா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments