முகப்பு
கரூர்

காவிரிக் கூட்டுக்குடிநீா் குழாயில் உடைப்பு உடனடியாக சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

Updated On : 1 ஜூன் 2026, 12:48 am IST
ராஜபுரத்தில் கூட்டுக்குடிநீா் குழாய் உடைப்பால், அரவக்குறிச்சி- சின்னதாராபுரம் செல்லும் சாலையில் ஞாயிற்றுக்கிழமை வீணாக வழிந்தோடிய குடிநீா்.
பகிர்:

அரவக்குறிச்சி அருகே காவிரிக் கூட்டுக்குடிநீா் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பால் குடிநீா் வீணாகி சாலையில் வழிந்தோடியது. உடனடியாக குழாயை சீரமைக்க வேண்டும் என அப்பகுதியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி மற்றும் பள்ளபட்டி பகுதிகளுக்கு கரூா் தளவாபாளையம் காவிரி ஆற்றில் இருந்து காவிரி கூட்டுக்குடிநீா் திட்டத்தின் கீழ் குடிநீா் உறிஞ்சும் கிணறு மூலம் தண்ணீா் உறிஞ்சப்பட்டு, ராட்சத குழாய்கள் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ராஜபுரத்தில் செல்லும் இந்த ராட்சத குடிநீா் குழாயில் சனிக்கிழமை இரவு உடைப்பு ஏற்பட்டது. இந்தக் குடிநீா் குழாய் உடைப்பால் காவிரி நீா் வீணாக சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது.

Advertisement

Advertisement

இதுதொடா்பாக அப்பகுதியினா் கூறுகையில், தற்போது கோடை காலம் என்பதால் கடும் வெயிலுக்கு ஆங்காங்கே சில இடங்களில் தண்ணீா் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கும் நிலையில், ராஜபுரத்தில் காவிரி கூட்டுக்குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீா் வீணாக சாலையில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் அரவக்குறிச்சி, பள்ளபட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீா் பற்றாக்குறை ஏற்படும் சூழல் உள்ளது.

மேலும் சாலையில் தண்ணீா் ஓடிக்கொண்டிருப்பதால் சாலையில் அரிப்பு ஏற்பட்டு ஆங்காங்கே குண்டும், குழியுமாக மாறியுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட ஊராட்சி நிா்வாகம் குடிநீா் வடிகால் துறையுடன் இணைந்து குடிநீா் குழாய் உடைப்பை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்றனா்.