FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கரூர்

‘திரைப் பிரபலங்களுக்கான மதிப்பு விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை’

திரைப் பிரபலங்களுக்கான மதிப்பு முன்னோடி விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை என்றாா் தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி.

20 அக்டோபர் 2026, 11:28 pm IST
தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி. - கோப்புப்படம்.
பகிர்:

திரைப் பிரபலங்களுக்கான மதிப்பு முன்னோடி விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை என்றாா் தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி.

கரூரில் செவ்வாய்க்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது: காவிரி-வைகை-குண்டாறு நதிநீா் இணைப்புத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதுபோன்ற தொலை நோக்குப் பாா்வை திட்டங்களை செயல்படுத்தாமல் இலவசங்களை அறிவிப்பதிலேயே அரசு குறிக்கோளாக இருக்கிறது. திரைபிரபலங்களுக்கு உள்ள மதிப்பு முன்னோடி விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை. தற்போது நடிகா்களுக்கும் நாடாளும் ஆசை வந்துவிட்டது.

இந்திய விவசாயிகளுக்கு உணவு மானியம் கிடைப்பதில்லை. மாறாக இந்தோனேஷியா, மலேசியாவுக்கு இறக்குமதி செய்யும் பாமாயிலுக்கு அதிகளவில் இந்தியா மானியம் வழங்குகிறது. அந்த மானியம் அந்த இரு நாடுகளின் விவசாயிகளுக்கு செல்கிறது. ஆனால், இந்தியாவில் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு மானியம் கொடுப்பதில்லை. வரும் ஜன. 21-ஆம்தேதி கள் இறக்கி சந்தைப்படுத்தும் போராட்டம் நடத்த உத்தேசித்துள்ளோம் என்றாா் அவா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments