அனுக்கூரில் இன்று அமைப்பு சாரா தொழிலாளர்கள் உறுப்பினர் சேர்க்கை
தமிழ்நாடு கட்டுமானம், அமைப்பு சாரா மற்றும் ஓட்டுநர் தொழிலாளர்கள் நல வாரியங்களின் நலத்திட்டங்களில் பயனடையும் வகையில்
தமிழ்நாடு கட்டுமானம், அமைப்பு சாரா மற்றும் ஓட்டுநர் தொழிலாளர்கள் நல வாரியங்களின் நலத்திட்டங்களில் பயனடையும் வகையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை அனுக்கூரில் உள்ள சமுதாயக் கூடத்தில் நடைபெறுகிறது. இதில் தகுதியுடையவர்கள் தங்களது குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பள்ளி மாற்றுச்சான்றிதழ், வயது சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், ஆதார் அடையாள அட்டை மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் அசல் மற்றும் நகலுடன், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ -3 ஆகியவற்றுடன் வந்து உறுப்பினர்களாக சேர்ந்து பயன் பெறலாம் என பெரம்பலூர் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.