FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
பெரம்பலூர்

பெரம்பலூரில் திமுக செயற்குழு கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம், பாலக்கரையில் உள்ள கட்சி அலுவலகத்தில், மாவட்ட அவைத் தலைவர் நடராஜன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 25 மே 2018, 4:09 am IST
பகிர்:

பெரம்பலூர் மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம், பாலக்கரையில் உள்ள கட்சி அலுவலகத்தில், மாவட்ட அவைத் தலைவர் நடராஜன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஒன்றியச் செயலர்கள் என். கிருஷ்ணமூர்த்தி, அண்ணாதுரை, மதியழகன், நல்லத்தம்பி, ஒன்றிய பொருப்பாளர்கள் ஜெகதீசன், மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலர் சி. ராஜேந்திரன் கட்சியின் செயல்பாடு, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பேசினார்.
கூட்டத்தில், தூத்துக்குடியில் பொதுமக்களின் சுற்றுப்புறச் சூழலுக்கு கேடு விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி நடத்தப்பட்ட அறப்போராட்டத்தில், பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதைக் கண்டிப்பது. துப்பாக்கிச் சூட்டை கண்டித்து, பெரம்பலூரில் வெள்ளிக்கிழமை (மே 25) நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பது. திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் (ஜூன் 1) திரளாகப் பங்கேற்பது. முன்னதாக கிராமங்கள் தோறும் தெருமுனை பிரசாரக் கூட்டம் நடத்துவது. தலைவர் பிறந்தநாளான ஜூன் 3-இல் நலத்திட்ட உதவிகள் வழங்குவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மு. அட்சயகோபால், என். ராஜேந்திரன், மாநில நிர்வாகிகள் பா. துரைசாமி, பெரியசாமி, மாவட்ட துணைச் செயலர் மா. ராஜ்குமார், மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நகரச் செயலர் எம். பிரபாகரன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments