தாட்கோ திட்டங்களில் பயன்பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
தாட்கோ மூலம் ஆதிதிராவிடர்களுக்காகச் செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களின் கீழ் பயன்பெறத்
தாட்கோ மூலம் ஆதிதிராவிடர்களுக்காகச் செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களின் கீழ் பயன்பெறத் தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நிலம் வாங்கும் திட்டம், நிலம் மேம்பாடு திட்டம், துரித மின் இணைப்பு திட்டம், தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் பெட்ரோல், டீசல் எரிவாயு சில்லரை விற்பனை நிலையம் அமைத்தல், இளைஞர்களுக்கான சுயவேலை வாய்ப்புத் திட்டம், மருத்துவ மையம், மருந்தியல், கண் கண்ணாடியகம், முடநீக்கு மையம், ரத்த பரிசோதனை நிலையம் அமைத்தல் மற்றும் மேம்படுத்துதல், சுய உதவிக் குழுக்களுக்கான சுழல்நிதி, சுய உதவிக் குழுக்களுக்கான பொருளாதாரக் கடனுதவி மானியம், திட்டத் தொகையில் 50 சதவீத மாவட்ட ஆட்சியர் விருப்புரிமை நிதி, மேலாண்மை இயக்குநர் விருப்புரிமை நிதி, தாட்கோ தலைவர் விருப்புரிமை நிதி, இந்திய குடிமைப்பணி முதன்மைத்தேர்வு எழுதுவோருக்கு நிதியுதவி, சட்டப் பட்டதாரிகளுக்கு நிதியுதவி, தமிழ்நாடு தேர்வாணையத் தொகுதி- 1 முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நிதியுதவி, பட்டயக் கணக்கர், செலவு கணக்கர், நிறுவன செயலர்களுக்கு நிதியுதவி ஆகிய திட்டங்களின் கீழ் பயன் பெறலாம்.
விண்ணப்பிக்க விரும்புவோருக்கு 18 முதல் 65 வயதுக்குள்ளும், குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ. 1 லட்சம் இருக்க வேண்டும். . http:// application.tahdco.com என்னும் தாட்கோ இணையதள முகவரியில் விண்ணப்பதாரரின் முழு விவரங்கள், புகைப்படம், இருப்பிடச் சான்றிதழ், எண், சாதிச் சான்றிதழ், குடும்ப வருமானச் சான்றிதழ், ஆதார் எண், விண்ணப்பதாரரின் தொலைபேசி, கைபேசி எண், திட்டங்களின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறுவதற்கு, அறிவிக்கப்பட்ட நாள்களில் 24 மணி நேரமும், மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் அலுவலக நேரத்திலும் பதிவு செய்யலாம். விண்ணப்பத்துக்கு பயனாளியிடமிருந்து ரூ. 60 வசூலிக்கப்படும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.