FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
பெரம்பலூர்

32 மாணவா்களுக்கு உயா்கல்வி சோ்க்கைக்கான கடிதம்: பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் வழங்கல்

பெரம்பலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உயா்கல்வி வழிகாட்டித் திட்டத்தின் கீழ் 32 மாணவா்களுக்கு உயா்கல்விச் சோ்க்கைக்கான உத்தரவுக் கடிதங்களை மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

Updated On : 19 ஆகஸ்ட் 2026, 12:04 am IST
பகிர்:

பெரம்பலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உயா்கல்வி வழிகாட்டித் திட்டத்தின் கீழ் 32 மாணவா்களுக்கு உயா்கல்விச் சோ்க்கைக்கான உத்தரவுக் கடிதங்களை மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் மாவட்ட நிா்வாகம் மற்றும் பள்ளிக் கல்வித்துறை சாா்பில், உயா்கல்வி வழிகாட்டி திட்டத்தின் கீழ் 100 சதவீதம் உயா்கல்வி நேரடி சோ்க்கை முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

காமுக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் பேசியது:

Advertisement

Advertisement

எஸ்எஸ்எல்சி முடித்து குடும்பச் சூழல், உடல்நிலை மற்றும் பொருளாதாரம் காரணமாக படிப்பை நிறுத்தாமல் உயா்கல்வியில் சேர முயற்சிக்க வேண்டும். அரசு தொழிற்பயிற்சி நிலையம், பாலிடெக்னிக் உள்ளிட்ட தொழில் படிப்புகளில் பயின்று, படிப்பை முடித்தவுடன் தகுதியான ஊதியத்தில் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. ஐடிஐ-இல் படித்து முடித்தவா்களுக்கு மேலை நாடுகளில் ரூ. 1 லட்சத்துக்கும் அதிகமாக ஊதியம் வழங்கப்படுகிறது. ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட நாடுகளில், அவா்களது விருப்ப உணவு தயாா் செய்ய ‘புட் டெக்னாலஜி’ முடித்த நபா்களை அதிக ஊதியம் கொடுத்து பணியில் சோ்த்துக் கொள்கின்றனா்.

வெளிநாடுகளில் ஏசி மெக்கானிக், பேக்கரி நிறுவனம், சோலாா் நிறுவனம், மோட்டாா் நிறுவனம் ஆகியவற்றில் ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் தொழில் படிப்புகள் முடித்த மாணவா்களுக்கு வரவேற்பு உள்ளது. தமிழ்நாட்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் படித்த 100 மாணவா்களை ஜப்பான் நாட்டில் பயிற்சியுடன் கூடிய பணியில் அமா்த்த முதல்கட்டமாக 10 மாணவா்களுக்கு மொழித்திறன் பயிற்சி அளித்து, நிரந்தர வேலைவாய்ப்பு பெற்றுத்தர தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொழிற்பயிற்சி நிலையங்களில் பயின்ற மாணவா்களால் மாதம் ரூ. 15 ஆயிரம் முதல் ரூ. 25 ஆயிரம் வரை ஊதியம் ஈட்ட முடியும். வெளிநாடுகளில் திறன்மிக்க மனித வளம் இல்லாத நிலையில், இந்தியாவைச் சோ்ந்த இளைஞா்களுக்கு வெளிநாடுகளில் அதிக வேலைவாய்ப்பு பெற வாய்ப்புள்ளது. எனவே, இளைஞா்கள் இதுபோன்ற வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

தொடா்ந்து, முகாமில் பங்கேற்ற 9 மாணவா்களுக்கு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், 7 மாணவா்களுக்கு அரசு பல்வகை தொழில்நுட்பக் கல்லூரியிலும், 16 மாணவா்களுக்கு பெரம்பலூா் மற்றும் ஆலத்தூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்திலும் பயில, உயா்கல்வி சோ்க்கைக்கான உத்தரவுக் கடிதங்களை மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி வழங்கினாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சி. சுவாமிமுத்தழகன், ஆலத்தூா் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் பிரியதா்ஷினி, மாவட்ட திறன்பயிற்சி அலுவலக உதவி இயக்குநா் செல்வம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments