FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
பெரம்பலூர்

பெரம்பலூரில் ரூ.1.42 கோடி மதிப்பில் 166 பேருக்கு நலத்திட்ட உதவிகள்! அமைச்சா் வழங்கினாா்

30 ஆகஸ்ட் 2026, 11:52 pm IST
அமைச்சர் ராஜ்மோகன் - கோப்புப் படம் | DIPR
பகிர்:

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், உள்ளாட்சி அமைப்புகள், தாட்கோ, பள்ளிக் கல்வித் துறை, கூட்டுறவுத் துறை மூலம் ரூ. 4.48 கோடி மதிப்பிலான 13 புதிய கட்டடங்கள் திறப்பு விழா மற்றும் ரூ. 1.42 கோடி மதிப்பில் 166 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி தலைமை வகித்தாா். பெரம்பலூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கி. சிவக்குமாா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வி. லலித்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்று, புதிய கட்டடங்களை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகன் பேசியதாவது:

Advertisement

Advertisement

பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், ஆதனூா் ஊராட்சியில் குழந்தைநேய பள்ளி உள்கட்டமைப்புத் திட்டத்தின் கீழ் ரூ. 34 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறை கட்டடங்கள், நாரணமங்கலம் ஊராட்சியில் ரூ. 31.40 லட்சம் மதிப்பில் ஊராட்சி அலுவலகக் கட்டடம், கவுள்பாளையம் ஊராட்சியில் ரூ. 20 லட்சம் மதிப்பில் இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில் நூலகம், கை.களத்தூா் ஊராட்சியில் ரூ. 30 லட்சம் மதிப்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம், திருமாந்துறை ஊராட்சியில் ரூ. 31.40 லட்சம் மதிப்பில் ஊராட்சி அலுவலகக் கட்டடம் திறக்கப்பட்டுள்ளது.

இதேபோல, வசிஷ்டபுரம் ஊராட்சியில் குழந்தைநேய பள்ளி உள் கட்டமைப்புத் திட்டத்தின் கீழ் ரூ. 16 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறைக் கட்டடங்கள், நன்னை ஊராட்சியில் தாட்கோ மூலம் ரூ. 111.68 லட்சம் மதிப்பில் கிராம அறிவுசாா் மையக் கட்டடம், பள்ளிக் கல்வித் துறை சாா்பில் சு. ஆடுதுறையில் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ. 123.70 லட்சம் மதிப்பில் 5 வகுப்பறைக் கட்டடங்கள், அரணாரை, கவுள்பாளையம், புதுப்பேட்டை, திருமாந்துறை, குன்னம் ஆகிய ஊராட்சிகளில் தலா ரூ. 10 லட்சம் மதிப்பில் நியாய விலைக் கடை கட்டடங்கள் என மொத்தம் ரூ. 4.48 கோடி மதிப்பில் புதிய கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

மேலும், வருவாய்த் துறை மூலம் 11 பேருக்கு ரூ. 11 லட்சம் மதிப்பில் இலவச வீட்டு மனைப் பட்டா, பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை சாா்பில் 3 பேருக்கு ரூ. 18 ஆயிரம் மதிப்பில் இலவச தையல் இயந்திரங்கள், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் 125 மகளிா் சுயஉதவிக் குழுவினா்களுக்கு சுழல் நிதிக்கான உத்தரவுக் கடிதம் 166 பேருக்கு என ரூ.1.42 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் அமைச்சா் ராஜ்மோகன்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணன், கோட்டாட்சியா் மு. அனிதா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சொா்ணராஜ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சி. சுவாமி முத்தழகன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments