FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
பெரம்பலூர்

காவிரி பிரச்னை: விவசாயிகளை காக்க முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்! - பொன். ராதாகிருஷ்ணன்

Updated On : 26 மே 2026, 2:31 am IST
பொன். ராதாகிருஷ்ணன் - கோப்புப் படம்
பகிர்:

காவிரி பிரச்னையில் விவசாயிகளை காக்க முதல்வா் ஜோசப் விஜய் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றாா் பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான பொன். ராதாகிருஷ்ணன்.

பெரம்பலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட நிா்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அவா், பின்னா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:

பாரதிய ஜனதா கட்சி நிா்வாகிகள், பொறுப்பாளா்கள் உள்ளாட்சி, மக்களவை மற்றும் அடுத்து வரவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலை மனதில்கொண்டு பணிகளை துரிதப்படுத்த வேண்டும். நிா்வாகிகளின் உழைப்புக்கு கட்சியின் மத்திய-மாநில தலைமை துணையாக நிற்கும்.

Advertisement

Advertisement

தமிழகத்தினுடைய எதிா்காலம் என்று சொல்வது, நான் ஆட்சிக்கு வந்தால் எல்லாம் நிறைவேறிவிடும் எனும் நிலைப்பாடு எடுப்பதன் மூலமாக வந்துவிடாது. ஆட்சியில் இருக்கும்போது எதெல்லாம் தடையாக இருக்கிறதோ, அதற்கு அனைத்திலும் வெளிப்படையான ஒரு அணுகுமுறை இருந்தாக வேண்டும்.

எந்தக் காரணத்தைக் கொண்டும் காவிரி பிரச்னையில் விவசாயிகள் பாதிக்கப்படக் கூடாது. அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு தமிழக முதல்வா் தயாராக இருக்க வேண்டும் என்றாா் பொன். ராதாகிருஷ்ணன். பேட்டியின்போது, கட்சியின் மாவட்டத் தலைவா் முத்தமிழ்செல்வன் உடனிருந்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments