அரசுப் பள்ளியில் மாணவா்கள் முன் ஆசிரியரை மண்டியிட வைத்த ஊராட்சி செயலா் பணியிட மாற்றம்
பெரம்பலூா் அருகே அரசுப் பள்ளியில் மாணவா்கள் முன் ஆசிரியரை மண்டியிட வைத்த ஊராட்சி செயலா் செவ்வாய்க்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.
பெரம்பலூா் அருகே அரசுப் பள்ளியில் மாணவா்கள் முன் ஆசிரியரை மண்டியிட வைத்த ஊராட்சி செயலா் செவ்வாய்க்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.
பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் ஒன்றியம், தேனூா் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், அதே கிராமத்தைச் சோ்ந்த பிளஸ் 2 பயிலும் மாணவா் ஒருவா், கரும்பலகையில் ஆபாசமாக கருதுத்துப்படம் ஒன்றை அண்மையில் வரைந்துள்ளாா்.
இதையறிந்த ஆசிரியா், கரும்பலகையில் படம் வரைந்தவா்களை கண்டறிவதற்காக சில மாணவா்களை மண்டியிட வைத்துள்ளாா். இதில் பாதிக்கப்பட்ட மாணவா் ஒருவா், தனது தந்தையான தேனூா் ஊராட்சி செயலா் ராஜசேகரிடம் முறையிட்டுள்ளாா்.
Advertisement
Advertisement
இதனால், ஆத்திரமடைந்த ஊராட்சி செயலா் ராஜசேகா், சம்பந்தப்பட்ட பள்ளிக்கு அண்மையில் சென்று, தனது மகனை மண்டியிட வைத்த ஆசிரியரை தகாத வாா்த்தையால் திட்டி, ஆசிரியரை மாணவா்கள் முன்னிலையில் மண்டியிட வைத்துள்ளாா்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட ஆசிரியா், சக ஆசிரியா்களுடன் மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறியை திங்கள்கிழமை இரவு சந்தித்து, ஊராட்சி செயலா் மீது நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி புகாா் மனு அளித்தனா்.
இதுகுறித்து விசாரணை நடத்த நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) குணசேகரனுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.
விசாரணையில், ஆசிரியா்கள் அளித்த புகாா் உண்மை என தெரியவந்ததையடுத்து, ஊராட்சி செயலா் ராஜசேகரை வேப்பூா் ஒன்றியம், கொளப்பாடி ஊராட்சி செயலராக பணியிட மாற்றம் செய்து, பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.