அன்னவாசல் ஒன்றியத்தில் வளர்ச்சிப் பணிகள் ஆய்வு
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை ஆட்சியர் சு. கணேஷ் புதன்கிழமை ஆய்வு செய்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை ஆட்சியர் சு. கணேஷ் புதன்கிழமை ஆய்வு செய்தார்.
அன்னவாசல் ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் ரூ.2.13 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியர் சு. கணேஷ் ஆய்வு செய்து கூறியது: கிராமப்புற மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் வகையில், ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், பனம்பட்டியில் ரூ.1. 46 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் தார்ச்சாலை மேம்பாட்டுப் பணி, மதியநல்லூர் ஊராட்சியில் ரூ.4 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள தரைமட்ட நீர் தேக்கத் தொட்டி, மதியநல்லூர் கலைக்குறிச்சிவயலில் ரூ. 26. 40 லட்சத்தில் கருவேல மரங்கள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் பணி பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. மேலும், கீழக்குறிச்சி ஊராட்சி மண்டைக்குளத்தில் ரூ. 6. 40 லட்சம் மதிப்பில் நடப்பட்ட கருவேல மரக்கன்றுகள், வீரப்பட்டி ஊராட்சியில் ரூ. 30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் கட்டுமானப் பணி என மொத்தம் ரூ. 2.13 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
ஆய்வின்போது, மரக்கன்றுகளை தினமும் நீரூற்றி பராமரிக்கவும், புதிதாக அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணறு மூலம் குடிநீர் குழாய் பதித்து பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்யவும், தார்ச்சாலை பணியை சரியான அளவுகளில் தரமாக மேற்கொள்ளவும், முடிவுற்ற பணிகளை உரிய முறையில் பராமரிக்கவும், நடைபெறும் பணிகளை தரமான கட்டுமானப் பொருள்களைக் கொண்டு கட்டி முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உரிய கால அளவில் கொண்டு வர அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது என்றார். ஆய்வின்போது, வட்டார வளர்ச்சி அலுவலர் சிங்காரவேலு, நாகராஜன்(கி.ஊ) வட்டாட்சியர் சோனைக்கருப்பையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.