FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

மன்னர் கல்லூரி மாணவர்கள் தர்னா

புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரி மாணவர்கள் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரி புதன்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.

Updated On : 2 ஆகஸ்ட் 2018, 8:50 am IST
பகிர்:

புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரி மாணவர்கள் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரி புதன்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.
அரசு மன்னர் கல்லூரியில் சுகாதாரமான குடிநீர், மின் இணைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக இல்லையாம். இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடம் பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லையாம். இதனால், அடிப்படை வசதிகளை உடனே மேம்படுத்தக்கோரி, புதன்கிழமை காலை வகுப்புகளைப் புறக்கணித்து தர்னாவில் ஈடுபட்டனர். தொடர்ந்து, கல்லூரி நிர்வாகத்தினர், போலீஸார் உரிய நடவடிக்கை எடுப்பதாக அளித்த உறுதியளிப்பை ஏற்று போராட்டத்தை கைவிட்டு மாணவர்கள் வகுப்புகளுக்குச் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments