முத்தரையர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
முத்தரையர் சிலையை வேறு சமூகத்தினர் பயன்படுத்துவதைக் கண்டித்து முத்தரையர் சங்கத்தினர் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
முத்தரையர் சிலையை வேறு சமூகத்தினர் பயன்படுத்துவதைக் கண்டித்து முத்தரையர் சங்கத்தினர் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். புதுக்கோட்டை திலகர் திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநில நிர்வாகி கருப்பையா தலைமை வகித்தார். திரளாகப் பங்கேற்ற அச்சங்கத்தினர் முத்தரையர் சிலையை மாற்று சமூகத்தினர் பயன்படுத்துவதை தவிர்க்க வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.