FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

பாரதிதாசன் பல்கலை.  மாதிரி கல்லூரியில் கலந்தாய்வு தொடக்கம்

அறந்தாங்கி அருகே பெருநாவலூரில் இயங்கி வரும் பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரி  கல்லூரியில் 2018-19 ஆம் ஆண்டிற்கான  மாணவர் சேர்க்கை கலந்தாய்வு புதன்கிழமை தொடங்கியது. 

Updated On : 7 ஜூன் 2018, 8:49 am IST
பகிர்:

அறந்தாங்கி அருகே பெருநாவலூரில் இயங்கி வரும் பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரி  கல்லூரியில் 2018-19 ஆம் ஆண்டிற்கான  மாணவர் சேர்க்கை கலந்தாய்வு புதன்கிழமை தொடங்கியது. 
நிகழாண்டுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு புதன்கிழமை நடைபெறும் என கல்லூரி நிர்வாகம் சார்பாக அறிவிக்கப்பட்டது.  அதன்படி புதன்கிழமை காலை பி.எஸ்.சி கணிதப் பிரிவுக்கான 60 இடங்களுக்கான கலந்தாய்வு தொடங்கியது. பல்கலைக்கழக வழிகாட்டுதலின்படி,  வகுப்புவாரியாக மதிப்பெண் எடுத்தவர்களின் தரவரிசை கல்லூரி வாயிலில் ஒட்டப்பட்டது. 
அதன்படி முன்னேறிய பிரிவின் கீழ் விளையாட்டில் முன்னுரிமை பெற்ற மகளிருக்கு கலந்தாய்வுக்கான சேர்க்கை படிவத்தை கல்லூரி முதல்வர் எம்.வீரப்பன் வழங்கினார். முதல் நாளிலேயே சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு  பிற்பட்ட வகுப்பு, மிகவும் பிற்பட்ட வகுப்பு உள்ளிட்ட அனைத்து பிரிவிற்கும் மதிப்பெண் அடிப்படையில் அனுமதி ஆணை வழங்கப்பட்டது.  தொடர்ந்து, பி.எஸ்.சி., இயற்பியல் கலந்தாய்வு நடைபெற்று அனுமதி ஆணை வழங்கப்பட்டது. மாலையில்  பி.எஸ்.சி கணினி அறிவியல் பாடத்திற்கான கலந்தாய்வு நடைபெற்று அனுமதி ஆணைகள் வழங்கப்பட்டன. அதிக மதிப்பெண் பெற்று தரவரிசையில் கலந்தாய்வில் கலந்து கொள்ளாதவர்களுக்கு பதிலாக அவர்களுக்கு அடுத்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு அனுமதி ஆணை வழங்கப்பட்டது. வியாழக்கிழமை காலை 11 மணிக்கு பி.காம் வணிகவியல் பாடப்பிரிவிற்கும் , மதியம்  2 மணிக்கு பி.பி.ஏ. (வணிக நிர்வாகவியல் ) பிரிவிற்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை காலை பி. ஏ ஆங்கிலம், மதியம்  2 மணிக்கு பி.ஏ தமிழ் பாடப் பிரிவுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது. காலி இடங்கள் இருந்தால் 13 மற்றும் 14 ஆகிய நாட்களில் முறையே அறிவியல், கலை  பாடப்பிரிவுகளுக்கும் மீண்டும் கலந்தாய்வு நடைபெறும் என கல்லூரி முதல்வர் எம். வீரப்பன் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments