சாலை விபத்தில் தொழிலாளி சாவு
கந்தர்வகோட்டையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற கூலித் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தார்.
கந்தர்வகோட்டையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற கூலித் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தார்.
தஞ்சாவூரைச் சேர்ந்த கணேசன்(52), கந்தர்வகோட்டையில் உள்ள தனியார் சீவல் கம்பெனியில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார்.
தஞ்சாவூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் தினந்தோறும் வேலைக்கு வந்து சென்ற இவர், செவ்வாய்க்கிழமை இரவு வேலை முடிந்து வீட்டுக்கு புறப்பட்டார். கந்தர்வகோட்டை அடைக்கலம் சாவடிகுளம் அருகில் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் காயமடைந்த கணேசன், தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இறந்தார்.
விபத்து குறித்து கந்தர்வகோட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.