7 பேரையும் விரைந்து விடுதலை செய்ய வேண்டும்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் தாமதமின்றி விடுதலை செய்ய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் தாமதமின்றி விடுதலை செய்ய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்.
புதுகையில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் மேலும் அவர் கூறியது:
பெட்ரோல், டீசல் உற்பத்திச் செலவு ரூ.28 தான். ஆனால் அதற்கு மத்திய, மாநில அரசுகள் விதித்துள்ள வரியால் தான் பெட்ரோல் ரூ. 84, டீசல் ரூ. 76 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மத்திய மாநில அரசுகள் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்காமல் மக்களுக்கு எதிராக செயல்படுகின்றனர்.
வெளிநாடுகளுக்கு ரூ.35-க்கு ஏற்றுமதி செய்யும் மத்திய அரசு, சொந்த நாட்டு மக்களுக்கு பெட்ரோல் விலையை அதிகரித்து துரோகம் செய்து வருகிறது. பிரதமர் மோடி அங்கன்வாடிப் பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை அறிவித்துள்ளார். ஆனால் அவர்களைப் பணி நிரந்தரம் செய்வதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
காவிரியில் இந்த வருடம் தண்ணீர் வந்தும் கடைமடைப் பகுதிக்கு தண்ணீர் போய்ச் சேராததால் பயிர்கள் தற்போது கருகி வருகிறது.
எனவே, கடைமடைப் பகுதி வரை தண்ணீர் செல்வதற்கும், கடன் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குட்கா ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள உயர் அதிகாரிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது உள்நோக்கம் கொண்டதாகத் தெரிகிறது. கடந்த காலங்களில் மத்திய அரசு, தமிழக அமைச்சர்கள் தலைமை செயலாளர்கள் வீடுகளில் நடத்திய சோதனை போன்று இதுவும் ஆகுமோ என்ற அச்சமும் எழுகிறது.
ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விரைந்து விடுதலை செய்ய ஆளுநர் முடிவு எடுக்க வேண்டும் என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.