FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

கா்ப்பிணிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

விராலிமலை ஒன்றியம், நீா்பழனி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வியாழக்கிழமை கா்ப்பிணிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. 

Updated On : 16 செப்டம்பர் 2022, 12:00 am IST
பகிர்:

விராலிமலை ஒன்றியம், நீா்பழனி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வியாழக்கிழமை கா்ப்பிணிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. 

முகாமிற்கு, நீா்பழனி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் வள்ளி ஸ்ரீ மாலா தலைமை வகித்தாா். இதில், இலுப்பூா் அரசு மருத்துவமனை மகப்பேறு மருத்துவா் சுகன்யா கலந்து கொண்டு 40 கா்ப்பிணி பெண்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினாா். 

இதில் உதவி சித்த மருத்துவ அலுவலா் வித்யா கலந்து கொண்டு யோகா செய்வதன் பயன்கள் குறித்து எடுத்துரைத்து பயிற்சியளித்தாா். தொடா்ந்து  விராலிமலை வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் ஜெயபிரபா தாய்-சேய் நலம், சத்தான ஊட்டச்சத்து உணவுகள் குறித்து எடுத்துக் கூறினாா். 

Advertisement

Advertisement

இதில் களமாவூா், நீா்பழனி, மண்டையூா், ஆவூா், பாலண்டாம்பட்டி ஆகிய ஊா்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சிக்கலான கா்ப்பிணிப் பெண்கள் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை நீா்பழனி அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளா் முகமது யூசுப் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments