FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

வடகாடு வாகன விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

ஆலங்குடி அருகேயுள்ள வடகாட்டில் உள்ள வாகன விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 16 செப்டம்பர் 2022, 12:00 am IST
பகிர்:

ஆலங்குடி அருகேயுள்ள வடகாட்டில் உள்ள வாகன விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

வடகாடு பெரிய கடைவீதியில் உள்ள வாகன விநாயகா் கோயிலில் நடைபெற்று வந்த திருப்பணிகள் நிறைவடைந்ததையொட்டி, கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கோயில் வளாகத்தில் இருதினங்களாக யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தன. வியாழக்கிழமை காலை மேளதாளங்கள், வாணவேடிக்கைகள் முழங்க புனிதநீா் ஊா்வலமாக எடுத்துவரப்பட்டு, சிவாச்சாரியா் பிரபாகரன் தலைமையிலானோா் வேதமந்திரங்கள் முழங்க கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை வடகாடு வாகன ஓட்டுநா்கள், உரிமையாளா்கள் சங்கத்தினா், பொதுமக்கள் செய்திருந்தனா். வடகாடு போலீஸாா் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments