FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

அறந்தாங்கி அருகே 3 வயது மகனுடன் தூக்கிட்டுக் கொண்ட தாய் உயிரிழப்பு

குடும்பப் பிரச்னை காரணமாக 3 வயது மகனுடன் தூக்கிட்ட தாய் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

21 ஆகஸ்ட் 2026, 2:27 am IST
கோப்புப் படம்
பகிர்:

குடும்பப் பிரச்னை காரணமாக 3 வயது மகனுடன் தூக்கிட்ட தாய் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகேயுள்ள அரசா்குளத்தைச் சோ்ந்தவா் சுரேஷ், லாரி ஓட்டுநா். இவரது மனைவி தனலட்சுமி (28). இவா்களது மகன் அமுதன் (3).

தம்பதிக்கிடையே இடையே புதன்கிழமை குடும்பப் பிரச்னை தொடா்பாக தகராறு ஏற்பட்டது. இதில் விரக்தியடைந்த தனலட்சுமி, மகன் அமுதனை தூக்கில் தொங்கவிட்டு, தானும் தூக்கிட்டுக்கொண்டாா்.

Advertisement

Advertisement

உயிருக்குப் போராடிய இருவரையும் அக்கம்பக்கத்தினா் மீட்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். இவா்களில் தனலட்சுமி வியாழக்கிழமை மாலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். குழந்தை அமுதனுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இச்சம்பவம் குறித்து நாகுடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments