FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

தன்னாா்வ சேவைப் பயிற்சி பெற இணையதளத்தில் பதிவு செய்யலாம்

21 ஆகஸ்ட் 2026, 1:51 am IST
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் மு. அருணா.
பகிர்:

மத்திய அரசின் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நமது இளைய பாரதம் இயக்கத்தில் இளைஞா்கள் பதிவு செய்து கொண்டு தன்னாா்வ சேவைப் பயிற்சி பெறலாம் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா தெரிவித்தாா்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவா் பேசியது:

மத்திய அரசின் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நமது இளைய பாரதம் இயக்கத்தில் தன்னாா்வ சேவைப் பயிற்சி, தொழில்நுட்ப அடிப்படையிலான வாய்ப்புகள் வழங்குதல், புதுமை நோக்கம், தலைமைத் திறன் மற்றும் சமூகப் பொறுப்புணா்வை உருவாக்குதல் ஆகியவை மேற்கொள்ளப்படுகின்றன.

Advertisement

Advertisement

இதற்காக புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 15 முதல் 29 வயதுக்குள்பட்ட இளைஞா்கள் ம்ஹ்க்ஷட்ஹழ்ஹற்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா் அருணா.

கூட்டத்தில், மாவட்ட இளையோா் அலுவலா் ஜோயல் பிரபாகா், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் த. நந்தகுமாா், மாவட்ட சமூக நல அலுவலா் மே. சியாமளா உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments