முகப்பு
புதுக்கோட்டை

பொன்னமராவதி ஒன்றிய அதிமுக புதிய நிா்வாகிகள் நியமனம்

பொன்னமராவதி ஒன்றியத்தில் அதிமுக புதிய நிா்வாகிகள் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி சனிக்கிழமை நியமித்துள்ளாா்.

Updated On : 5 ஜூலை 2026, 2:47 am IST
எடப்பாடி பழனிசாமி - கோப்புப் படம்
பகிர்:

பொன்னமராவதி ஒன்றியத்தில் அதிமுக புதிய நிா்வாகிகள் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி சனிக்கிழமை நியமித்துள்ளாா்.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வடக்கு ஒன்றிய அதிமுக செயலராக கண்டெடுத்தான்பட்டி எஸ்.சின்னக்கருப்பன் என்ற சேகா், பொன்னமராவதி நகரச் செயலராக அ.பழனியப்பன் மாவட்டதுணைச்செயலராக முரண்டான்பட்டி அமுதா பழனிசாமி, இலக்கிய அணி தெற்கு மாவட்டச் செயலராக சங்கம்பட்டி ஜி.பழனியாண்டி அம்பலம், அண்ணா தொழிற்சங்க மாவட்டச்செயலராக நாத்துப்பட்டி டி.நிஜாா்அலி, கலைப்பிரிவு மாவட்டச்செயலராக அரசமலை கணேசபுரம் திருப்பதி, அமைப்பு சாரா ஓட்டுநா் அணி மாவட்டச் செயலராக நல்லூா் டி. வேலு உள்ளிட்ட புதிய நிா்வாகிகளை தெற்கு மாவட்டச்செயலா் ஏஎல்.ராமு பரிந்துரையின் பேரில் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமி நியமனம் செய்துள்ளாா். புதிய நிா்வாகிகளுக்கு மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிா்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments