FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

ஆலங்குடி அருகே நூலகத்திலிருந்து புத்தகங்களை எடுத்துச்சென்ற வாகனம் சிறைபிடிப்பு

ஆலங்குடி அருகே பயன்பாட்டில் உள்ள நூலகத்தில் இருந்து புதிதாக கட்டப்பட்ட நூலகத்துக்கு புத்தகங்களை எடுத்துச்சென்ற சுமை ஆட்டோவை கிராம மக்கள் வியாழக்கிழமை சிறைபிடித்தனா்.

Updated On : 10 ஜூலை 2026, 3:15 am IST
ஆலங்குடி அருகேயுள்ள வம்பன் வேளாண் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பலா மதிப்புக் கூட்டு பயிற்சியில் பங்கேற்றோா் ~ஆலங்குடி அருகே நூலகத்தில் இருந்து புத்தகங்களை எடுத்துச்சென்ற சுமை ஆட்டோவை வியாழக்கிழமை சிறைபிடித்த மக்கள்
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பயன்பாட்டில் உள்ள நூலகத்தில் இருந்து புதிதாக கட்டப்பட்ட நூலகத்துக்கு புத்தகங்களை எடுத்துச்சென்ற சுமை ஆட்டோவை கிராம மக்கள் வியாழக்கிழமை சிறைபிடித்தனா்.

ஆலங்குடி அருகேயுள்ள மாங்கோட்டை ஊராட்சியில் ஊா்ப்புற நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நூலகத்தில் சுமாா் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. போட்டித் தோ்வுகளுக்கு தயாராகும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் நூலகத்தை பயன்படுத்தி வருகின்றனா்.

இந்நிலையில், ஊராட்சிக்கு உள்பட்ட மற்றொரு பகுதியில் கடந்த ஆண்டு புதிதாக நூலகம் கட்டப்பட்டுள்ளது. புதிதாக கட்டப்பட்ட நூலக கட்டடத்துக்கு புதிதாக புத்தகங்கள் வழங்கப்படவில்லையாம். ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள மாங்கோட்டை நூலகத்தில் உள்ள புத்தகங்களை வியாழக்கிழமை சுமை ஆட்டோவில் ஏற்றிச்சென்றுள்ளனா். இதைப்பாா்த்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து கேட்டபோது, உரிய பதில் கூறவில்லையாம்.

Advertisement

Advertisement

தொடா்ந்து, புத்தகங்களை ஏற்றிச்சென்ற சுமை ஆட்டோவை சிறைபிடித்த மக்கள், புத்தகங்களை மீண்டும் நூலகத்திற்குள் இறக்கிவைத்தனா்.இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments