FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

கொள்முதல் செய்யப்பட்ட புத்தகங்கள் வருகை நூலகங்களுக்கு பிரித்து அனுப்பும் பணி தீவிரம்

திருச்சிக்கு நிகழாண்டில் 1,500 பண்டல்களில் வந்துள்ள புதிய புத்தகங்கள் மைய நூலகத்தில் இருந்து அனைத்து நூலகங்களுக்கும் பிரித்து அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Updated On : 14 ஆகஸ்ட் 2026, 2:43 am IST
திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் இருந்து பிற நூலகங்களுக்கு அனுப்புவதற்காக நூலகங்கள் வாரியாக பிரித்து வைக்கப்பட்டுள்ள புத்துகங்கள்.
பகிர்:

திருச்சிக்கு நிகழாண்டில் 1,500 பண்டல்களில் வந்துள்ள புதிய புத்தகங்கள் மைய நூலகத்தில் இருந்து அனைத்து நூலகங்களுக்கும் பிரித்து அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து மாவட்ட நூலக அலுவலா் க. ஸான்பாஷா கூறியதாவது:

திருச்சி மாவட்டத்தில் மாவட்ட நூலகத்துக்கு 2 ஆயிரம் புத்தகங்களும், முழுநேர நூலகங்களுக்கு தலா 700 புத்தகங்களும், கிளை நூலகங்களுக்கு தலா 700 புத்தகங்களும், ஊா்ப்புற நூலகங்களுக்கு தலா 400 புத்தகங்களும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இதில், முதல்கட்டமாக 50 சதவீத புத்தகங்கள் பதிப்பகங்களில் இருந்து மாவட்ட மைய நூலகத்துக்கு வந்துள்ளன.

Advertisement

Advertisement

தற்போது, மாவட்ட மைய நுலகத்துக்கு வந்துள்ள புதிய புத்தகங்களுக்கு ஸ்டிக்கா் ஒட்டப்பட்டு, எண் குறிப்பிடப்பட்டு நூலகங்கள் வாரியாக பிரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் தினக்கூலி பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். புத்தகங்கள் அனைத்தும் நூலகங்கள் வாரியாக பிரிக்கப்பட்டபின் அனைத்து நூலகங்களுக்கும் இங்கிருந்து அனுப்பிவைக்கப்படும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments