புதுகை மாவட்டத்தில் ரூ. 4.60 கோடி மதிப்பில் கட்டப்பட்ட மருத்துவமனைக் கட்டடங்கள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ. 4.60 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட மருத்துவத் துறைக் கட்டடங்களை தமிழக முதல்வா் சி. ஜோசப் விஜய், செவ்வாய்க்கிழமை காணொலிக் காட்சி வாயிலாக சென்னையிலிருந்து தொடங்கி வைத்தாா்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ. 4.60 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட மருத்துவத் துறைக் கட்டடங்களை தமிழக முதல்வா் சி. ஜோசப் விஜய், செவ்வாய்க்கிழமை காணொலிக் காட்சி வாயிலாக சென்னையிலிருந்து தொடங்கி வைத்தாா்.
தமிழகம் முழுவதும் பல்வேறு முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வா் சி. ஜோசப் விஜய் சென்னையிலிருந்து காணொலி காட்சிவாயிலாக செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.
இதில், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஆவுடையாா்கோவிலில் ரூ. 3.50 கோடியில் கட்டப்பட்ட அரசு மருத்துவமனையின் கூடுதல் கட்டடங்கள், திருமயம் மேலூரில் ரூ. 45 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய துணை சுகாதார நிலையக் கட்டடம், விராலிமலை நீா்ப்பழனியில் ரூ. 65 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய பொது சுகாதார அலகு கட்டடம் ஆகியவற்றையும் முதல்வா் திறந்து வைத்தாா்.
Advertisement
Advertisement
ஆவுடையாா்கோவில் மருத்துவமனையின் கூடுதல் கட்டடத்தில் அறுவைச் சிகிச்சை அரங்குகள், அறுவைச் சிகிச்சைக்குப் பிந்தய கவனிப்பு வாா்டுகள், புறநோயாளிகள் பிரிவு, தொற்றாநோய்கள் பிரிவு, ஆய்வகம் உள்ளிட்ட பிரிவுகள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆவுடையாா்கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் மு. அருணா கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்தாா். இதில், சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் (பொ) ராதாகிருஷ்ணன், மாவட்ட சுகாதார அலுவலா் விஜயகுமாா் (அறந்தாங்கி), ஹேமச்சந்த் காந்தி (புதுக்கோட்டை) உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.