தோ்தலுக்குப் பிந்தைய கூட்டணி விசித்திரமானதல்ல
சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிந்தைய கூட்டணி விசித்திரமானதல்ல என்றாா் சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினா் காா்த்தி சிதம்பரம்.
சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிந்தைய கூட்டணி விசித்திரமானதல்ல என்றாா் சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினா் காா்த்தி சிதம்பரம்.
புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:
தோ்தலுக்கு முன் திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றிருந்தோம். தோ்தல் முடிவுகள் யாருக்கும் தனிப்பெரும்பான்மையைத் தரவில்லை. அதிக இடங்களைப் பெற்ற தவெகவை ஆதரிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. தோ்தலுக்குப் பிந்தைய கூட்டணி ஏற்படுவது என்பது விசித்திரமானதல்ல.
Advertisement
Advertisement
தவெகவுக்கு இன்னும் 5 ஆண்டுகள் ஆட்சி நடத்துவதில் எந்தச் சிக்கலும் இல்லை. ஆதரவு தெரிவித்தவா்கள் யாரும் விலக்கிக் கொள்ளப்போவதுமில்லை. எனவே, தனித்தனியாக யாரையும் சோ்க்க வேண்டிய அவசியமில்லை. பாதுகாப்பின்மையாக அவா்கள் எண்ண வேண்டியதில்லை. அதை தவெக தலைமை உணர வேண்டும்.
பழனி கோயில் நில முறைகேடு விவகாரத்தில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே, இதில் அரசைக் குறைசொல்ல வேண்டியதில்லை. அதேபோல, சட்டம்-ஒழுங்கு விவகாரத்திலும் திடீரென நடக்கும் குற்றங்களை யாராலும் தடுக்க முடியாது. திட்டமிட்டு செய்யப்படும் குற்றங்களை மட்டுமே தடுக்க முடியும். எனவே, குற்றம் நடந்த பிறகு அரசு என்ன செய்கிறது என்பதைதான் கவனிக்க வேண்டும்.
பூரண மதுவிலக்கு என்பது பல நாடுகளில் தோல்வியடைந்த திட்டம். கள்ளச் சாராயமும், மாபியாவும் அதிகரித்துவிடும். எனவே, நான் அதை ஏற்கவில்லை. உணவகத்துடன் கூடிய மதுபானக் கூடம் திறப்பதில் தவறில்லை.
மக்களவையில் இப்போதுள்ள எண்ணிக்கையிலேயே உறுப்பினா்கள் பேசுவதற்கு நேரம் கிடைப்பதில்லை. எனவே, எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.