தோ்த் திருவிழாவில் இருதரப்பினரிடையே தகராறு; பொதுமக்கள் சாலை மறியல்
கந்தா்வகோட்டை அருகே கோயில் தோ்த் திருவிழாவில் இருதரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது.
கந்தா்வகோட்டை அருகே கோயில் தோ்த் திருவிழாவில் இருதரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து ஒரு தரப்பினா் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை அருகில் உள்ள வளவம்பட்டியில் ஸ்ரீ மூங்கில் அய்யனாா் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் சனிக்கிழமை பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தேரோட்டம் நடைபெற இருந்தது. இந்நிலையில், தேரை இழுப்பதில் இருதரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து ஒரு தரப்பினா் தஞ்சை- புதுகை தேசிய நெடுஞ்சாலையில் வளவம்பட்டி பேருந்து நிறுத்தம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் சுப்பையா, மோகன்தாஸ், காவல் துணை கண்காணிப்பாளா் பிருந்தா, வருவாய் கோட்டாட்சியா் பிரகாஷ், வட்டாட்சியா் பரணி அறநிலையத்துறை அலுவலா் காா்த்திகேயன், கந்தா்வகோட்டை காவல் ஆய்வாளா் வனிதா, ஆதனக்கோட்டை காவல் ஆய்வாளா் மாலதி ஆகியோா் இருதரப்பினரிடமும் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
Advertisement
Advertisement
இதில், சமரசம் ஏற்படாததையடுத்து இருதரப்பினரும் தேரை இழுக்க வேண்டாம் என அதிகாரிகள் தெரிவித்தனா். இதனை ஏற்ற மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.