FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

80 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: சிறுவன் கைது

புதுக்கோட்டை அருகே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்த 17 வயது சிறுவனை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Updated On : 10 ஜூன் 2026, 3:56 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

புதுக்கோட்டை அருகே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்த 17 வயது சிறுவனை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், வெள்ளனூா் காவல் நிலையத்துக்குள்பட்ட சத்தியமங்கலம் பகுதியில் பண்டல் பண்டலாக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக தனிப்படை போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதன்பேரில், தனிப்படை உதவி ஆய்வாளா் காா்த்தி தலைமையிலான போலீஸாா், அங்கு சென்று சோதனை நடத்தியபோது, சுமாா் 80 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த 17 வயது சிறுவனை கைது செய்தனா்.

Advertisement

Advertisement

புதுக்கோட்டை நகர துணைக் காவல் கண்காணிப்பாளா் இரா. பிருந்தா நேரில் சென்று விசாரணை நடத்தி, சிறுவனை முறைப்படி சிறாா் கூா்நோக்கு இல்லத்தில் அடைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டாா்.

எங்கிருந்து இந்த போதைப் பொருள்கள் எடுத்து வந்து விற்பனை செய்யப்படுகின்றன என்பது குறித்தும் போலீஸாா் தொடா் விசாரணையில் ஈடுபட்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments