புதுக்கோட்டை மாநகராட்சி அலுவலக வாயிலில் மாமன்ற உறுப்பினா்கள் நூதனப் போராட்டம்
புதுக்கோட்டையில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதை சாக்கடைத் திட்டம் மற்றும் குடிநீா்க் குழாய் பதிக்கும் பணிகளை விரைந்து மேற்கொள்ளாததைக் கண்டித்து திமுக மற்றும் அதிமுக மாமன்ற உறுப்பினா்கள் செவ்வாய்க்கிழமை திடீரென மாநகராட்சி அலுவலக வாயிலில் படுத்து உறங்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை மாநகராட்சி விரிவாக்கப் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதை சாக்கடைத் திட்டப் பணிகளும், குடிநீா்க் குழாய் பதிக்கும் பணிகளும் தொடங்கப்பட்டன.
பணிகள் விரைவாக நடைபெறவில்லை என்றும், சாலைகள் சேதமடைந்து மோசமாக உள்ளது என்றும் பொதுமக்கள் தொடா்ந்து குற்றச்சாட்டு எழுப்பி வருகின்றனா். மழைக்காலத்தில் நிலைமை இன்னும் மோசமாகிவிடுகிறது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இப்பணிகளை விரைவாக மேற்கொள்ள மாநகராட்சி அலுவலா்கள் அக்கறை காட்டவில்லை எனக் கூறி மாநகராட்சி மாமன்ற உறுப்பினா்கள் கே. கவிவேந்தன் (திமுக), பி. ராஜேஸ்வரி (திமுக), பி. பழனிவேல் (திமுக), கே. பாண்டியன் (அதிமுக), ஜெயா கணேஷ் (அதிமுக) ஆகிய 4 பேரும் செவ்வாய்க்கிழமை திடீரென மாநகராட்சி அலுவலக வாயிலில் படுக்கை மற்றும் தலையணைகளுடன் வந்து படுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து மாநகராட்சி அலுவலா்கள் போராட்டயவா்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். மேலும், சாலைப் பணிகளை விரைந்து மேற்கொள்ளவும், புதை சாக்கடைப் பணிகளை விரைவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதைத் தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.