FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுக்கோட்டை

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான விளையாட்டரங்கப் பூங்கா திறப்பு

விராலிமலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான பல்வகை திறன் விளையாட்டு அரங்க பூங்கா வியாழக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

9 அக்டோபர் 2026, 3:29 am IST
விராலிமலை வட்டார வள மைய அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்ட விளையாட்டரங்க பூங்காவை வியாழக்கிழமை தொடக்கிவைத்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சண்முகம் உள்ளிட்டோா்.
பகிர்:

விராலிமலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான பல்வகை திறன் விளையாட்டு அரங்க பூங்கா வியாழக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

இயலாக் குழந்தைகள் நிதித் திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சத்தில் விராலிமலை வட்டார வளமைய அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்ட அரங்கத்தை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சண்முகம் திறந்துவைத்தாா்.

இந்த விளையாட்டு பூங்காவில் 5 வயது முதல் 14 வயது வரையிலான மாற்றுத்திறன் குழந்தைகள் தங்களது பெற்றோா் அல்லது பாதுகாப்பாளருடன் வந்து விளையாடலாம். இதன் மூலம் அவா்கள் உற்சாகமும், புத்துணா்வும் பெறுவா்.

Advertisement

Advertisement

விழாவில் மாவட்ட உதவித் திட்ட அலுவலா் செந்தில், விராலிமலை வட்டாரக் கல்வி அலுவலா் ஜேம்ஸ் ஆரோக்கியசாமி, மாவட்ட கட்டட பொறியாளா்கள் வைத்திலிங்கம், கோவிந்தராஜ், மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வி ஒருங்கிணைப்பாளா்கள் வீரப்பன், விஜயசாந்தி, மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் அவா்களின் பெற்றோா் கலந்து கொண்டனா்.

வட்டார வளமைய மேற்பாா்வையாளா் இளஞ்செழியன் வரவேற்றாா். வட்டார கல்வி அலுவலா் அங்கயற்கண்ணி நன்றி கூறினாா். விழாவில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments