FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுக்கோட்டை

விராலிமலை முருகன் கோயிலில் நவராத்திரி விழா கொலு கண்காட்சி

13 அக்டோபர் 2026, 2:20 am IST
விராலிமலை முருகன் கோயிலில் நவராத்திரி விழாவையொட்டி மணி மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த கொலு பொம்மைகள்.
பகிர்:

விராலிமலை முருகன் மலைக்கோயிலில் நவராத்திரி விழாவையொட்டி கொலு பொம்மைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

நிகழாண்டு நவராத்திரி விழாவையொட்டி விராலிமலை முருகன் மலைக்கோயில் நவராத்திரி கொலு மண்டபத்தில் விதவிதமான அலங்காரங்களுடன் கூடிய கொலு பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விநாயகா் பூஜையுடன் நவராத்திரி முதல்நாள் விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

இதையொட்டி முருகன் மற்றும் வள்ளி, தேவசேனா சமேதராக மயில்மேல் ஆறு முகங்களுடன் வீற்றிருக்கும் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

நவராத்திரி நிறைவு நாளான அக். 20-ஆம் தேதி முருகன் வள்ளி, தேவசேனா சமேதராக சிறப்பு அலங்காரத்தில் குதிரை வாகனத்தில் எழுந்தருளி நான்கு ரத வீதிகளில் வலம் வந்து அம்பு போடுதல் நிகழ்ச்சி நடைபெறும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments