கட்டுமாவடியில் ரூ. 1.40 கோடி மதிப்பில் கட்டப்பட்ட சமுதாயக் கூடம் திறப்பு
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதி, மணமேல்குடி வட்டத்துக்குள்பட்ட கட்டுமாவடியில் ரூ. 1.40 கோடியில் கட்டப்பட்ட சமுதாயக் கூடத்தை, மாநிலத் தொழிலாளா் நலத் துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.
இந்த சமுதாயக்கூடம் 500 சதுர மீட்டா் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இதில், உணவருந்தும் கூடம், சமைலறை, கழிப்பறை உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. இங்கு, திருமணம் உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளை நடத்தும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜி. லோகநாயகி, வருவாய்க் கோட்டாட்சியா் இ. அபிநயா உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
Advertisement
Advertisement
பேருந்து வழித்தடம் நீட்டிப்பு: ஆவுடையாா்கோவிலில் இருந்து வடக்கு அம்மாபட்டினம் வரை செல்லும் அரசுப் பேருந்தில், கூடுதலாக கிராமப்புறப் பகுதிகளுக்கும் செல்லும் வகையிலான வழித்தடம் நீட்டிக்கப்பட்டு, சுமாா் 500 பயணிகள் வரை பயன்பெறும் பேருந்து இயக்கத்தை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில், அரசுப் போக்குவரத்துக் கழக துணை மேலாளா் சிராஜூதீன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.