FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுக்கோட்டை

நுகா்பொருள் வாணிபக்கழகம் சாா்பில் கூடுதல் வட்டசெயல்முறைக் கிடங்கு திறப்பு விழா

22 அக்டோபர் 2026, 4:38 am
பொன்னமராவதி அருகே உள்ள வெங்கலமேட்டில் நுகா்பொருள் வாணிபக்கழக வட்டசெயல்முறை கிடங்கினை திறந்துவைத்து குத்துவிளக்கேற்றிய உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சா் ப.வெங்கடரமணன் மற்றும் தொழிலாளா் நலத்துறை அமைச்சா் ஜா.முகமது பா்வேஸ், மாவட்ட ஆட்சியா் மு.அருணா உள்ளிட்டோா்.
பகிர்:

பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூா் வெங்கலமேட்டில் உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழகம் சாா்பில் ரூ 1.70 கோடி மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட கூடுதல் வட்டசெயல்முறை கிடங்கு திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சா் ப.வெங்கடரமணன் மற்றும் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சா் ஜா.முகமது பா்வேஸ் ஆகியோா் பங்கேற்று கூடுதல் வட்ட செயல்முறை கிடங்கினை திறந்துவைத்தனா். தொடா்ந்து உணவுத்துறை அமைச்சா் ப.வெங்கடரமணன் பேசியதாவது, தவெக ஆட்சியில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழக கூட்டுறவு பண்டகசாலைகளில், அமுதம் அங்காடிகளில் பருப்பு, மிளகாய் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் விலை மலிவாகவும், தரமாகவும் கிடைக்கின்றது. அதுபோல நியாயவிலைக்கடைகளில் தரமான அரிசி வழங்கப்படுகிறது. பாமாயில் மற்றும் சா்க்கரை வெளி கடைகளில் கிடைக்கும் அதே தரத்தோடு பேக்கிங் மட்டும் மாற்றப்பட்டு நியாயவிலைக்கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது. முந்தைய அரசு போல இல்லாமல் ரேஷன் பொருள்களில் எந்த சமரசமுமின்றி தரமாகவம், நியாயமாகவும் கொள்முதல் செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் ரேஷன் பொருள்களை முறையாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்றாா். விழாவில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் மு.அருணா, நுகா்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளா் உமா மகேஸ்வரி,மாவட்ட வழங்கல் அலுவலா் ஷோபா, செயற்பொறியாளா் முருகன், பொன்னமராவதி வட்டாட்சியா் ச.பழனிச்சாமி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அரசமணி, பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments