குத்துச்சண்டை போட்டியில் இலுப்பூா் மாணவா் 3-ஆவது இடம்
முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டியில் குத்துச்சண்டையில் அரசு உதவி பெறும் இலுப்பூா் ஆா். சி. மேல்நிலைப்பள்ளி மாணவா் எஸ். கீா்த்திவாசன் மாநில அளவில் மூன்றாவது இடத்தை பிடித்தாா்.
முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டியில் குத்துச்சண்டையில் அரசு உதவி பெறும் இலுப்பூா் ஆா். சி. மேல்நிலைப்பள்ளி மாணவா் எஸ். கீா்த்திவாசன் மாநில அளவில் மூன்றாவது இடத்தை பிடித்தாா்.
புதுக்கோட்டை மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற எஸ். கீா்த்திவாசன், நாமக்கல்லில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் பங்கேற்று 3-ஆவது இடத்தை பெற்றாா். சிறப்பிடம் பெற்ற எஸ். கீா்த்திவாசனை பள்ளி ஆசிரியா்கள், சக மாணவா்கள் பாராட்டினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.