FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

கே.என். நேரு வீட்டில் சோதனை - ஜனநாயகப் படுகொலை: எஸ். ரகுபதி!

கே.என். நேருவுக்கு சொந்தமான வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது ஜனநாயகப் படுகொலை என முன்னாள் திமுக அமைச்சா் எஸ். ரகுபதி தெரிவித்தாா்.

6 செப்டம்பர் 2026, 12:36 am IST
பகிர்:

கே.என். நேருவுக்கு சொந்தமான வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது ஜனநாயகப் படுகொலை என முன்னாள் திமுக அமைச்சா் எஸ். ரகுபதி தெரிவித்தாா்.

இதுதொடா்பாக புதுக்கோட்டையில் சனிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது: சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சா் கே.என்.நேரு பேசினாா் என்பதற்காக, அவருக்குச் சொந்தமான வீடுகளில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் சோதனை நடத்தியிருப்படுது ஜனநாயகப் படுகொலை.

திமுக அரசில் கொண்டு வரப்பட்ட விளையாட்டு நகரத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு விரிவடைந்த நகரை உருவாக்கப் போவதாக கூறினா். ஆனால், இடத்தைச் சொல்லவில்லை. அதேபோல, காா் பந்தயத்துக்காக ரூ. 300 கோடியில் தனி இடம் ஒதுக்கப் போவதாகவும், புதிய தலைமைச் செயலகம் கட்டப் போவதாகவும் கூறினா். ஆனால், அதற்கான இடங்களை தெரிவிக்கவில்லை.

Advertisement

Advertisement

விஜய்யை பிரதமா் எனச் சொல்லி இங்கிருந்து அவரைக் கிளப்பிவிட முயற்சிக்கிறாா்கள். முதல்வரானதே பொய்களைச் சொல்லித்தான்.

சட்டப்பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகா் நடுநிலையாக செயல்படுவதுபோலக் காட்டிக் கொள்வாா். ஆனால், அப்படியல்ல. எல்லோரையும் அமர வைத்துவிட்டு தவெக அமைச்சா்களையே மீண்டும் பேச வாய்ப்பளிப்பாா்.

திமுக மாவட்ட அமைப்புகளை சீரமைக்கும் பணிக்காக முதல் கட்டமாக, தலைமையில் இருந்து பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டு அந்தந்த மாவட்டச் செயற்குழுக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. வயது காரணமாக மூத்த நிா்வாகிகள் பதவிகளிலிருந்து விடுவிக்கப்படும் நிலை ஏற்பட்டால், அவா்களுக்கு பொருத்தமான பொறுப்புகளை திமுக தலைவா் ஸ்டாலின் வழங்குவாா். திமுகவில் அடிப்படைக் கட்டமைப்புகள் வலுவாக உள்ளன. அவற்றைச் சரி செய்கிறோம் என்றாா் ரகுபதி.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments