குடந்தையில் திமுகவினர் கொண்டாட்டம்
திமுக தலைவராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றதை ஒட்டி கும்பகோணம் நகர திமுக சார்பில் புதன்கிழமை இனிப்புகள் வழங்கி, வெடிகள் வெடித்து கொண்டாடப்பட்டது .
திமுக தலைவராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றதை ஒட்டி கும்பகோணம் நகர திமுக சார்பில் புதன்கிழமை இனிப்புகள் வழங்கி, வெடிகள் வெடித்து கொண்டாடப்பட்டது .
முன்னதாக திமுகவினர் ஊர்வலமாக நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று, உச்சிபிள்ளையார் கோயிலில் நிறைவடைந்தது. இதையடுத்து திமுகவினர் அங்கு வெடிகள் வெடித்து, இனிப்பு வழங்கினர். நகர அவைத்தலைவர் செல்வராஜ், நகரச் செயலர் தமிழழகன், பொருளாளர் சோடாகிருஷ்ணமூர்த்தி, வட்டச் செயலர் சசி, முன்னாள் கவுன்சிலர் அனந்தராமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.