கும்பகோணத்தில் வீட்டுமனை பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம்
திருவிடைமருதூர் வட்டம், மானம்பாடி அஞ்சல் அம்பேத்கர் தெரு மக்கள், தங்களது பகுதியில் உள்ளவர்களுக்கு சொந்தமாக வீட்டுமனை கிடையாது.
திருவிடைமருதூர் வட்டம், மானம்பாடி அஞ்சல் அம்பேத்கர் தெரு மக்கள், தங்களது பகுதியில் உள்ளவர்களுக்கு சொந்தமாக வீட்டுமனை கிடையாது.
கடந்த 15 ஆண்டுகளாக நெருக்கடியான நிலையில் குடும்பம் நடத்தி வருகிறோம். இதனால் பல்வேறு துயரங்களை சந்திக்கிறோம். எனவே, தனி வட்டாட்சியர் குடியிருப்பு மனையும், இலவச பட்டாவும் வழங்க வேண்டும் எனக் கோரி கும்பகோணம் வட்டாட்சியரிடம் மனு அளிக்க வந்தனர்.
ஆனால் அலுவலகத்தில் தனி வட்டாட்சியர் இல்லை என்று கூறி காலை முதல் மனு அளிக்க வந்தவர்களை நிற்க வைத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் தமிழ்தேசிய பாதுகாப்பு கழக கும்பகோணம் ஒன்றிய அமைப்பாளர் சிறைச்செல்வன் தலைமையில், தனி வட்டாட்சியர் அலுவலக வாயிலில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அங்கிருந்த அலுவலர்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டோர் மனு அளித்துவிட்டு கலைந்து சென்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.