ஒரத்தநாடு அருகே கோயில் உண்டியல் திருட்டு
ஒரத்தநாடு வட்டம், ஒக்கநாடு மேலையூரில் பழைமையான வீரணார் கோயில் உள்ளது. இக்கோயில் அண்மையில் புதுப்பிக்கப்பட்டு, கடந்த 10ஆம் தேதி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
ஒரத்தநாடு வட்டம், ஒக்கநாடு மேலையூரில் பழைமையான வீரணார் கோயில் உள்ளது. இக்கோயில் அண்மையில் புதுப்பிக்கப்பட்டு, கடந்த 10ஆம் தேதி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
இந்த விழாவில் பங்கேற்க கும்பகோணம் பகுதியில் இருந்து சீனிவாசன், சுதர்சன், கணேசன் மற்றும் சில குருக்கள் வந்திருந்தனர். கும்பாபிஷேகம் முடிந்து மண்டல பூஜைக்காக கோயிலில் சீனிவாசன், சுதர்சன், கணேசன் ஆகிய மூன்று குருக்களும் தங்கியிருந்தனர். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு கோயிலில் இருந்த உண்டியலை காணவில்லை. அதேநேரத்தில், கோயிலில் மண்டல பூஜை செய்து வந்த சுதர்சன் மற்றும் கணேசன் குருக்கள் ஆகிய இருவரையும் காணவில்லை. இதுகுறித்து ஒக்கநாடு மேலையூர் வடக்கு தெருவை சேர்ந்த மாணிக்கத்தின் மகன் சங்கர் அளித்த புகாரின்பேரில் ஒரத்தநாடு போலீஸார் விசாரிக்கின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.