FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

144 நாடுகளில் யோகா கடைப்பிடிப்பு: 144 நாடுகளில் யோகா கடைப்பிடிப்பு

உலக அளவில் 144 நாடுகளில் யோகா கடைப்பிடிக்கப்படுகிறது என்றார் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் க. பாஸ்கரன்.

Updated On : 26 ஜூன் 2018, 8:36 am IST
பகிர்:

உலக அளவில் 144 நாடுகளில் யோகா கடைப்பிடிக்கப்படுகிறது என்றார் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் க. பாஸ்கரன்.
இப்பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற உலக யோகா நாள் கருத்தரங்கம், புதுப்பொலிவுடன் மொழிப்புல அவையம் திறப்பு விழா, பல்கலைக்கழக வெளியீடுகளுக்கான விற்பனை மையம், மொழிப்புல நூலகத் திறப்பு விழா,  தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் கோடைகாலச் சிறப்பு யோகா பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழா,  பேராசிரியர் முகிலை ராசபாண்டியனார் அறக்கட்டளைத் தொடக்க விழா ஆகிய அறுபெரும் விழாவில் அவர் பேசியது:
யோகா என்பது இந்தியா கண்ட மிகப்பெரிய செல்வம். குறிப்பாக, இந்தியாவுக்குத் தமிழர்கள் கொடுத்தக் கொடை யோகா. இது, தற்போது உலகளவில் பேசப்படுகிறது. 
 தற்போது 144 நாடுகளில் யோகா முறையாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஜூன் 21-ம் தேதியன்று அதிகமான நீண்ட பகல் பொழுதைக் கொண்ட நாள் என்பதால், அன்றைய நாளில் உலக யோகா நாள் கொண்டாடப்படுகிறது. 
யோகா என்பது உடற்பயிற்சி மட்டுமல்ல. யோகா என்பது சமயம் அல்ல. அது ஒரு தத்துவம் என்றார் துணைவேந்தர்.
விழாவில் கோடைகாலச் சிறப்பு யோகப் பயிற்சி பெற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்பட்டது. தமிழ்ப் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டடத்திலும் பல்கலைக்கழக வெளியீட்டுக்கான விற்பனைப் பிரிவைத் துணைவேந்தர் திறந்து வைத்தார்.  
பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர் நா. மோகன்தாஸ், திருச்சி பத்மம் யோகா நிறுவனர் ஜெ. சந்திரசேகரன் பேசினர். மொழிப்புல முதன்மையர் இரா. முரளிதரன், தத்துவ மையத் துறைத் தலைவர் பி. பாலச்சந்திரன், பேராசிரியர் இளையாப்பிள்ளை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments