செப். 15-இல் அண்ணா பிறந்தநாள் சைக்கிள் போட்டி
தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி விரைவு சைக்கிள் போட்டி செப். 15-ம் தேதி நடைபெறவுள்ளது.
தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி விரைவு சைக்கிள் போட்டி செப். 15-ம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்திருப்பது:
பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி செப். 15-ம் தேதி காலை 7 மணிக்கு தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் நடத்தப்படவுள்ளது. சைக்கிள் போட்டிகள் 13 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீ. தொலைவுக்கும், 15 மற்றும் 17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ. தொலைவுக்கும், 13 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கு 10 கி.மீ. தொலைவுக்கும், 15 மற்றும் 17 வயதுக்குபட்ட மாணவிகளுக்கு 15 கி.மீ. தொலைவுக்கும் நடத்தப்படவுள்ளது. இப்போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகள் இந்தியாவில் தயாரான மிதிவண்டிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மாணவ, மாணவிகள் போட்டி தொடங்குவதற்கு ஒரு மணிநேரத்துக்கு முன்பே போட்டி நடைபெறும் இடத்துக்கு வர வேண்டும். பள்ளித் தலைமையாசிரியரிடமிருந்து பெற்ற வயது சான்றிதழுடன் வந்தடைய வேண்டும். பள்ளித் தலைமையாசிரியரிடமிருந்து வயது சான்றிதழ் பெற்று வராதவர்கள் சைக்கிள் போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
சைக்கிள் போட்டியில் முதல் முன்று இடங்களில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்குப் பரிசும், சான்றிதழும் வழங்கப்படும். போட்டியில் முதல் பத்து இடங்களைப் பெறுபவர்களுக்குப் பங்கு பெற்றதற்கான தகுதிச் சான்றிதழ் வழங்கப்படும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.