FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மக்காச்சோள பயிரில் பூச்சி அழிப்பு: விவசாயிகளுக்கு செயல்விளக்கம்

மக்காச்சோள பயிரை தாக்கும் படைப்புழுக்களை  அழிக்கும் முறைகள் குறித்து ஈச்சங்கோட்டை  வேளாண்மை கல்லூரி மாணவிகள்

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

மக்காச்சோள பயிரை தாக்கும் படைப்புழுக்களை  அழிக்கும் முறைகள் குறித்து ஈச்சங்கோட்டை  வேளாண்மை கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு திங்கள்கிழமை செயல்விளக்கமளித்தனர்.
பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை அருகே நடுத்தோப்பு பகுதியில்  மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ள ஒரு வயலில் ஈச்சங்கோட்டை வேளாண்மை கல்லூரி சார்பில் களப்பணியில் ஈடுபட்டுள்ள அம்மாபேட்டை வட்டார, கிராமப்புற வேளாண் பணி அனுபவ மாணவிகள் சு. அகல்யா, சே. அர்ச்சனா, செ. காவியா, ஞா. ராகவி, மு. ரம்யா, சு. சிந்து மற்றும் அம்மாபேட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சுஜாதா, வேளாண் அலுவலர் ராஜதுரை, உதவி வேளாண்  அலுவலர் சூரியமூர்த்தி உள்ளிட்ட குழுவினர் மக்காச்சோள பயிரைத் தாக்கும் ஆர்மிவார்ம் எனப்படும் அயல்நாட்டு படைப்புழுக்களை அழிக்கும் விதம் பற்றி விவசாயிகளுக்கு செயல் விளக்கமளித்தனர்.
அப்போது,  படைபுழுக்கள் தாக்கிய மக்காச்சோள இளம்பயிர்கள் அதிக அளவில் சேதமடைந்து காணப்படும். மேலும்,  வளர்ச்சி குன்றி நடுக்குருத்து சேதமடைந்து காணப்படும்; கதிர்களிலும் அதிக அளவில் சேதம் ஏற்படும்.
இதை கட்டுப்படுத்த கூழ்ம பதத்திலுள்ள மண் கரைசலை பயிரின் குருத்து பகுதியில் ஊற்றலாம் அல்லது சைபாமெத்திரின் எனும் மருந்து கரைசலை பயிர்கள் மீது தெளித்தும் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம். மேலும்,  வயல்களில் விளக்கு பொறிகளை வைத்து தாய் அந்து பூச்சியை அழிப்பதன் மூலம் இந்த நோயை கட்டுப்படுத்தலாம் என செயல் விளக்கமளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments