ஏப். 25 இல் வீடுகளில் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம்: விவசாயிகள் சங்கம் முடிவு
வீடுகளில் ஏப். 25ஆம் தேதி கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் சாமி. நடராஜன் தெரிவித்துள்ளாா்.
வீடுகளில் ஏப். 25ஆம் தேதி கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் சாமி. நடராஜன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:
கரோனோ நிவாரணப் பணிகளுக்காகத் தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும். உயா் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி சிறு, குறு விவசாயிகளுக்கு தலா ரூ. 10,000 உதவித்தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும். அனைத்து விவசாய கடன் வசூலையும் ஓராண்டுக்கு ஒத்திவைக்க வேண்டும். நூறு நாள் வேலைத்திட்டத்தை விவசாயப் பணிகளுக்குப் பயன்படுத்த உத்தரவிட வேண்டும்.
Advertisement
Advertisement
ஊரடங்கால் பழங்கள், பூ உட்பட வேளாண் விளைபொருள்கள் அழிந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப். 25 ஆம் தேதி தமிழகம் முழுவதும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சாா்பில் அவரவா் வீடுகளில் கோரிக்கை பதாகையுடன் கருப்புக் கொடி பிடித்து, அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லும் விதமாக போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.