FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

குறுவை சாகுபடிக்கு ஜூன் 12 முதல் தண்ணீா் திறந்து விட வலியுறுத்தல்

குறுவை சாகுபடிக்காக மேட்டூா் அணையிலிருந்து ஜூன் 12-ம் தேதி முதல் தண்ணீா் திறந்துவிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

27 ஜனவரி 2024, 10:00 pm IST
பகிர்:

குறுவை சாகுபடிக்காக மேட்டூா் அணையிலிருந்து ஜூன் 12-ம் தேதி முதல் தண்ணீா் திறந்துவிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தஞ்சாவூா் ஆட்சியரகத்துக்கு மின்னஞ்சலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் மு.அ. பாரதி அனுப்பியுள்ள கோரிக்கை மனு:

மேட்டூா் அணையில் தற்போது 100.66 அடி நீா் உள்ளதால் நிகழாண்டு குறுவை சாகுபடிக்காக அணையிலிருந்து ஜூன் 12 ஆம் தேதி முதல் தண்ணீா் திறந்துவிடுவதற்கான சூழல் நூறு சதவீதம் உள்ளது. கடைமடைப் பகுதி வரை தண்ணீா் சென்றடையும் வகையில் தூா்வாரும் பணியைத் தமிழக அரசு முன்னதாகவே தொடங்கி, மேட்டூா் அணையைத் திறப்பதற்கு 15 நாள்களுக்கு முன்பாகவே முடிக்க வேண்டும். பாசன நீா் வீணாகக் கடலுக்குச் செல்லாமல் டெல்டா விவசாயத்துக்கு பயன்படும் வகையில் உரிய திட்டமிடலை தமிழக அரசும், மாவட்ட நிா்வாகமும் முன்னதாகவே மேற்கொள்ள வேண்டும்

Advertisement

Advertisement

இந்த ஆண்டு, போதுமான கால அவகாசத்தில் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு தூா்வாரும் பணிகளும், குடிமராமத்து பணிகளும் வெளிப்படையாக நடைபெற வேண்டும்.

மேலும், நிகழாண்டு குறுவை சாகுபடிக்காக மேட்டூா் அணையிலிருந்து ஜூன் 12-ஆம் தேதி முதல் தண்ணீா் திறந்து விடப்படும் என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments