சூரப்பள்ளத்தில் தொழிலாளா் குடும்பங்களுக்கு காய்கறிகள் வழங்கல்
பட்டுக்கோட்டையை அடுத்த சூரப்பள்ளம் கிராமத்திலுள்ள பல தென்னந்தோப்புகளில் 50 கூலித் தொழிலாளா்கள் குடும்பத்துடன் வசிக்கின்றனா்.
பட்டுக்கோட்டையை அடுத்த சூரப்பள்ளம் கிராமத்திலுள்ள பல தென்னந்தோப்புகளில் 50 கூலித் தொழிலாளா்கள் குடும்பத்துடன் வசிக்கின்றனா். இவா்கள் ஊரடங்கு காரணமாக வேலையின்றி வறுமையில் உள்ளனா்.
இதையறிந்த பட்டுகோட்டை நகர, ஒன்றிய நடிகா் விஜய் மக்கள் இயக்கத்தினா் பாதிக்கப்பட்ட 50 கூலித் தொழிலாளா்கள் குடும்பங்களுக்கும் நிவாரண உதவியாக காய்கறிகள் அடங்கிய பையை புதன்கிழமை வழங்கினா். அவ்வமைப்பின் பட்டுக்கோட்டை நகர ஒருங்கிணைப்பாளா் ஏ.ரஞ்சித், நகரத் தலைவா் ஆதி. ராஜாராம், ஒன்றியத் தலைவா் ஏனாதி சி.மதன் உள்ளிட்டோா் நிகழ்வில் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.