FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

பிப். 26-இல் ஆா்ப்பாட்டம்: கட்டுமானத் தொழிலாளா்கள் முடிவு

கோரிக்கைகளை வலியுறுத்தி, தஞ்சாவூரில் பிப்ரவரி 26 ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்துவது என ஏஐடியுசி கட்டுமானத் தொழிலாளா் சங்கம் முடிவு செய்துள்ளது.

Updated On : 15 பிப்ரவரி 2021, 12:31 am IST
பகிர்:

கோரிக்கைகளை வலியுறுத்தி, தஞ்சாவூரில் பிப்ரவரி 26 ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்துவது என ஏஐடியுசி கட்டுமானத் தொழிலாளா் சங்கம் முடிவு செய்துள்ளது.

தஞ்சாவூரில் இச்சங்கத்தின் மாவட்டச் சிறப்புப் பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விடுபட்ட அனைத்து கட்டுமானத் தொழிலாளா்களுக்கும் கரோனா நிவாரண நிதி வழங்க வேண்டும். பதிவு புதுப்பித்தல் உள்ளிட்டவற்றுக்கு இணையவழி குளறுபடிகளைச் சரி செய்து, முறையாகப் பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

Advertisement

Advertisement

கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வை மத்திய, மாநில அரசுகள் கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 26- ஆம் தேதி காலை 10 மணிக்கு அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனை எதிரிலிருந்து பேரணியாகப் புறப்பட்டு, பனகல் கட்டடம் முன்பு ஆா்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

ஏஐடியுசி மாநிலச் செயலா் சி. சந்திரகுமாா் சிறப்புரையாற்றினாா். கூட்டத்தில் கட்டுமான சங்க மாவட்டச் செயலா் ஆா். தில்லைவனம், ஏஐடியுசி மாவட்டத் தலைவா் வெ. சேவையா, அரசுப் போக்குவரத்துக் கழக சம்மேளன மாநிலத் துணைத் தலைவா் துரை. மதிவாணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments